எனக்கு தெரிந்ததை நான் எழுதுகின்றேன்

Thursday, October 25, 2012

ஜாதகம், சாதகமா? பாதகமா?


ஹாய் ஹாய் ஹாய்! எல்லாருக்கும் வியாழக்கிழமை வாழ்த்துக்கள்!

பொதுவா ’கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்’ என்றுதானே சொல்லுவார்கள்! அந்த வாழ்க்கை சிறப்பாக அமைய பெரியவர்கள் பார்த்து வைக்கும் திருமணத்தில் பல்வேறு திட்டமிடல்கள் நடைபெறும் என்பது உலகமரிந்ததுதான்!

அதுல முக்கியமான ஒன்று ஜாதகம் பாக்கரது! பல வீடுகளில் பெண்ணோட அல்லது பையனோட ஃபோட்டோவும் ஜாதகமும் கெடச்சதுமே ஜாதகம் பாத்துட்டுத்தான் அடுத்த வேலையா சம்மந்தம் பேசப் போவது என்ற முடிவுக்கு வருவார்கள்! நல்லதுதான், ஆனால் சில வீடுகளில் எல்லாம் பொண்ணு பாத்து முடிச்சதும்தான் ஜாதகம் பாப்பாங்க! ஆனா அதுக்குள்ள மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் ஒருத்தருக்கு ஒருத்தரப் பிடிச்சுடும்! அதுக்கு அப்பறம் அந்த சம்மந்தத்தையே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்!

பெரியவர்கள் நிச்சயிக்கும் கல்யாணத்துலையாவது பரவாயில்லை! இப்பை எல்லாம் காதல் திருமணத்திற்கும் ஜாதகம் பாக்கனும் என்று பெரியவர்கள் அடம் பிடிக்கிறார்கள்! ஆனா சில உஷாரான பையபுள்ளைக என்ன பண்றாங்க தெரியுமா? அவங்க லவ் பண்ணீட்டு இருக்க காலத்துலையே ஒரு நல்ல ஜோசியராப் பாத்து பொறுத்தம் பாத்துடுவாங்க!

எல்லாம் ஓகேனா சைலண்டா விட்டுடுவாங்க! ஏதாச்சும் கோளாறு இருந்தாக்கா, கட்டத்தையே மாத்திடுவாங்கலாம்! அப்பறம் என்ன? கட்டத்த மாத்தினா எல்லா பொறுத்தமும் சரியா அமைந்துவிடப் போகிறது! நோநோ, பொறுத்தம் சரியா அமையும்படி கட்டத்த மாத்திக்கிறது! எப்டியோ இப்டி எல்லாம் கோல்மால் பண்னி சில ஜோடிகள் வாழ்க்கையில ஒன்னு சேந்துடராங்க!

ஆனா, சில இடங்கள்ல என்ன நடக்குது தெரியுமா? நீ அந்தப் பையனக் கல்யாணம் பண்னிகிட்டா அவன் செத்துப் போயிடுவான் அப்டினு இந்தப் பொண்ணுகிட்ட சொல்லி உணர்வுப்பூர்வமாக மிறட்டி எப்படியோ அவங்களோட காதலப் பிரிச்சு, அந்தப் பெற்றோர் சொல்லும் பையனையே கல்யாணம் பண்ண வச்சுடுவாங்க! நிறைய கதைகள் நான் இந்த மாதிரி எல்லாம் கேள்விப்பட்டு இருக்கேன்!

அட அத விடுங்க! எனக்கு தெரிஞ்ச  ஃப்ரெண்ட்கு அந்த மாதிரி எல்லாம் நிறைய ப்ரச்சனை ஜாதகத்துனால வந்து இருக்கு! ஒரு ஜோசியர் ஒரு மாதிரியும் இன்னொரு ஜோசியர் இன்னொரு மாதிரியும் சொல்லிட்டு இருந்தாங்க! ஆனா, அவங்க அம்மா ரொம்ப குழம்பீட்டு இருந்தாங்க! அரை மனசோடதான் அவள அந்தப் பையனுக்குக் கல்யாணம் செஞ்சு வச்சாங்க! ஆனா அந்த ஜோசியரெ சொன்னா மாதிரி  ஏகப்பட்ட பொண்ணுங்களோட தொடர்பு வைத்திருப்பவர் அல்ல அந்த பெண்ணின் கணவர்! ஒரு பொண்ணு வந்து அவரை அப்ரோச் பண்ணினதக் கூட அவகிட்ட சொல்லீட்டார்! அவங்களுக்குள்ள அப்டி ஒரு அன்யோன்யம்! அவங்க அம்மாவே அசந்து போறாங்க!

சமீபத்துல எங்க சொந்தக் காரர் ஒருத்தவங்களுக்கு ஒரு பெண் பார்த்துக் கல்யாணம் பண்னி வச்சாங்க! அந்தப் பையனும் கல்யாணத்துக்கு  சம்மதிச்சுதான் சீரும் சிறப்புமா கல்யாணம் நடந்தது! ஆனா கல்யானமான அன்னைக்குல இருந்து இந்தப் பொண்ணப் பாத்தாலே எறிஞ்சு விழ ஆறம்பிச்சான்! அது போக அவன் தொழில் சார்ந்து சென்னையில்தான் தங்கி இருப்பதால், அந்தப் பெண்ணையும் உடன் அழைத்துப் போகும்படியும் அந்த குடும்பத்தினர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மாப்பிள்ளை மறுத்துவிட்டார்!

பையனுடைய அண்ணன், அண்ணி, அம்மா எல்லாருமே இந்தப் பொண்ணுக்குத்தான் ஃபுல் சப்போட்! இந்தப் பெண்ணிடம் கணவன் முகம் கொடுத்து பேசுவதுமில்லை, தவறிப் போய் கை மேலே பட்டாலும் திட்டுவது போன்ற நிகழ்வுகள் அன்றாட வாடிக்கையானது! பத்தாக் குறைக்கு குடிப் பழக்கம் வேறு! நாங்க எல்லாம் வேற மாதிரி விசயங்களால்தான் அந்தப் பையன் இந்த பொண்ணுகூட நெருங்கரதே இல்லயோனு நெனச்சா, ஒரு நன்நாளில் பையன் வீட்டில ஜாதகம் பாத்தா, அந்தப் பெண்ணுக்கு நாக தோசம் இருப்பதாகவும் அந்தப் பையனும் பெண்ணும் ஒன்று சேர்ந்தால் பையன் உயிருடன் இருக்க மாட்டான் என்றும் சொல்லிவிட்டனராம்!

அப்பறம் கடைசியில கல்யாணமாகி ஆறு மாதங்கலிலேயே விவாகரத்து வாங்குவது என்று முடிவாயிற்று! பெண் வீட்டாருக்கு இந்த தோசம் விசயம் தெரிந்துதான் இருந்தது, ஆனால் மாப்பிள்ளை வீட்டாரிடம் மறைத்துவிட்டனராம்! நான் என்ன கேட்கிறேன் என்றால் ஜாதகம் போன்ற விசயங்களைத் தெளிவாகப் பார்த்துவிட்டு திருமனத்தை செய்திருக்கலாமில்லையா? நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்? ஆனா, அந்தப் பையன் சைடுல ஏதோ பெரிய தப்பு இருக்கா மாதிரி தெரியுது! எப்டியோ ஜாதகத்துனால பல குடும்பங்களில் ஏகப்பட்ட சிக்கல்கள் நடக்கின்றன!

எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு, ஆனால் ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை! சில நேரங்களில் சரியாக இருக்கலாம், ஆனால் அது பல நேரங்களில் தவறாகத்தான் சொல்லப்படுகிறது! குழந்தை பிறந்த நிமிடத்தை  1 நொடிப் பொழுது முன்னராகவோ பின்னராகவோ குறித்துவிட்டால் ஜாதகம் வேறு மாதிரி ஆகிவிடுகிறதே! அப்பறம் அங்கேயே அதன் மீதான நம்பகத் தண்மை குறைந்துதானே போகிறது?

மற்றொரு சம்பவத்தைச் சொல்கிறேன்!நான் வனிகவியல்  ட்யூஷன் படித்த அந்த ஆசிரியப் பெண்மனி ஒரு முறை சொல்லிக் கொண்ட சம்பவம்! அவர்களுக்குத் திருமனமாகி 1 வருசமா குழந்தை பிறக்கவில்லை என அவங்க மாமியார் ஜாதகம் பாத்து இருக்காங்க. அப்போ ஜோசியர் ‘இவங்களுக்குக் கருவே தங்காது, குழந்தையே பிறக்க வாய்ப்பில்லை’ என்றாராம்!

அதை வைத்து மாமியார் குத்திக் காட்டி இருக்கிறார்! ஆனால் இவர்களுக்கு நல்ல நம்பிக்கை உண்டு! தன்னம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும்! இறுதியில் ஜெய்த்தது அந்தப் பெண்ணின் நம்பிக்கைதான்! அவங்களுக்கு ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை!

ஒரு சிலர் தினமும் ராசி பலன் பார்ப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு அடிமைத்தனம் மாதிரியான பழக்கம்! ஒரு நாள் தடங்கல் என்று ஒருவருக்கு போட்டு இருக்கு என்று வைத்துக் கொள்வோம். அது பலன் பார்ப்பவரது மனதில் ஆழமாகப் பதியும்!

விஞ்ஞானப்படி நாம் என்ன நம்பிக்கையோடு இருக்கிறோமோ அதுதானே நடக்கும்! அது போலத்தான், எதார்த்தமாக ஏர்படும் தடங்கள்; உதாரணத்திற்கு ஆஃபிஸ் போய் ப்ளாக்க ஓப்பென் பண்ணி பதிவு எழுத தலைப்ப டைப் பண்ணும் போது கரண்ட் போரது. அப்டி ஒன்னு நடந்தா, ‘எனக்கு அப்பவே தெரியும், தடங்கல்னு போட்டு இருந்துச்சே’னு அப்பறம் புலம்ப வேண்டியதுதான்! உங்களுக்கு இந்த மாதிரி அனுபவம் நடந்திருக்கா? :))))

கடைசியா நான் என்ன சொல்ல வரேன்னா, ஜாதகம் பாக்கரதா இருந்தா ஒழுங்கா பாத்து கல்யாணம் பண்ணுங்க. ஆனா கல்யாணம் பண்ணதுக்குப் பிறகு அது சொத்த, இது சொத்தனு சொல்லி எதுவும் முடிவு செய்யாதீர்கள்! கணவன் மணைவி ஒன்றினைந்தால் உடல்ரீதியான பாதிப்புகள் வரும் அல்லது உயிர் போகும் என்று சொன்னார்களேயானால் நீங்கள் அடுத்து நாட வேண்டியது மருத்துவரைத்தான்! உங்களது சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும்! குழந்தை இல்லை என்றாலும் இதேதான்! அத விட்டுட்டு நேரம் சரியில்லை அப்டி இப்டினு சப்பக்கட்டு கட்டீட்டு இருக்காதீங்க! எந்த ப்ரச்சனைக்கு யாருகிட்ட போனா தீர்வு கிடைக்குமோ அங்க போங்க!

அப்பாடா... ரொம்ப நாளா எழுதனும்னு நெனச்சுகிட்டு இருந்தத ஒரு வழியா எழுதீட்டேன்! சரி பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக வலைத்தளங்களுக்கும் நட்பு வட்டத்துக்கும் பகிர்ந்துக்கங்க! வேற வித்யாசமான பதிவோட உங்கள சந்திக்கும் வரை.... டாட்டா, பைபை, சீயூ!    
     
தொடர்புடைய பதிவுகள் :


14 comments:

 1. ஹாய் சுடர்!! ஒரு நல்ல விழிப்புணர்வு தான்.. எவ்ளோ தான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் மூட பழக்கவழக்கங்களுக்கு பஞ்சமே இல்லை நம் நாட்டில்!!! தண்ணீர் பஞ்சம் உணவு பஞ்சம் போல தான் இதுவும் தீராதது!!

  அந்த காலத்துல வானவியல வச்சி உண்மையாகவே நடக்கவிருப்பதை எச்சரிக்கை பண்ணாங்க ஆனால் இப்போ அது காசு பார்க்க மட்டுமே பயன்படுது!!
  தான திருந்தினா தான் உண்டு....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சமீரா... அவங்கவங்களுக்காத் தெரிஞ்சா சரி! கருத்துக்கு மிக்க நன்றி!

   Delete
 2. அட நீங்க வேற.....
  இது திருந்தவே திருந்தாதுகள். எத்தனையோ பேர் ஜோசியரின் கூற்றுக்கு மாற்றமாக நடந்து சாதித்திருக்கிறார்கள். சில இடங்களில் வீட்டுப் பெரிசுகளால்தான் இந்த பிரச்சனை பெரிதுபடுத்தப் படுகிறது .இனிவரும் காலத்தில் இந்த்ப் பிரச்சனைகள் குறையும் என்றே எதிர்பார்க்கிறேன்

  அப்புறம் தலைப்பு ரொம்ம பொருத்தமாவும் வித்தியாசமாகவும் இருக்குது

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் குறையும்! தலைப்பு வித்யாசமா இருக்கா? நன்றி!

   Delete
 3. no one is forcing the people to see horoscope.it is not superstitious .people are making it superstitious.astrology is not easy.if astrology is superstitious even our satellite and all science also superstitious only.Money making people are destroying the good things.if the girl is very black and not looking good no one love that girl.first of all love is superstitious.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது சரிதான்! நான் மறுக்கவில்லையே நான்! கருத்துக்கு மிக்க நன்றி!

   Delete
 4. இந்தத் தொல்லை இப்போது குறைந்து விட்டதாக நினைக்கிறேன்.... காரணம் : பெண்களின் ஆழ்ந்த கல்வி...

  நன்றி...
  tm2

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் குறைந்து கொண்டுதான் வருகிறது! மிக்க நன்றி சார்!

   Delete
 5. மிக அழகான, ஆணித்தரமான கருத்துக்கள். கடைசிப் பாராவில் நீங்க சொல்லியிருக்கற விஷயங்களோட நான் முழுமையா ஒத்துப் போறேன் சுடர். தன்னை ஒரு பெண் அப்ரோச் பண்ணினதைக் கூட மனைவிட்ட சொல்லியிருக்காருன்னா அவர் கிரேட். அந்த மனைவி லக்கி கேர்ள்தான். அவங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க! நீங்களும் நம்ம கட்சிதானா? மகிழ்ச்சி! மிக்க நன்றி சார்!

   Delete
 6. ஜோதிடம் பார்க்காமல் திருமணம் செய்வதற்கு சில விதி விளக்குகள் உண்டு.

  1. பொண்ணும் பையனும் பிடித்து போய் கல்யாணம் செய்வது. [ஓடிப் போய்/பெற்றோர் சம்மதத்துடன், ஆனால், சரி என முடிவான பின்னர் ஒருபோதும் பொருத்தம் பார்க்கிறேன் என போகக் கூடாது.]

  2. கோவிலில் திருவுளச் சீட்டு போட்டு பெயர் சம்மதம் பெறுவது.

  3. சூழ்நிலை காரணமாக பெரியோர்களாக சேர்த்து வைப்பது.

  4. பெண்ணின் திருமணம் ஏதோ காரணத்துக்காக நின்ற நிலையில் அவசரத்துக்கு யாரையோ கிடைத்தவனை பிடித்து திருமணம் செய்தல்.

  இது போன்ற சூழ்நிலைகளில் சாதகம் பார்க்கத் தேவையில்லை.

  ஜாதகம் நம்பத் தக்கது அல்ல என சொல்லியிருக்கிறீர்கள், ஐயம் வெரி சாரி சுடர்விழி , உங்க கருத்தை நான் ஆனால் தக்கது அல்ல. Maybe you approached a wrong guy.

  ReplyDelete
 7. உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன், ஆனால் அவை ஏற்கத் தக்கவை அல்ல.

  ReplyDelete
  Replies
  1. ஓ! இப்படிக்கூட இருக்கிறதா? நீங்கள் சொல்லி இருக்கும் 4 சூழல்கள் அருமை! இது எனது கருத்து மட்டுமேதான் சார்! எனது மற்றும் என் சார்ந்தவர்களின் அனுபவத்தை வைத்து நான் சொன்னேன்! கருத்துக்கு மிக்க நன்றி!

   Delete
 8. முதலில் வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.

  நான் உங்களுடன் முழுக்க முழுக்க ஒத்துப் போகிறேன். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் சிறிது நேரத்தை மாற்றி அதை மக நட்சத்திரமாக மாற்றி, திருமணம் நடந்து இப்போது வெளி நாட்டில் இரண்டு குழந்தைகளுடன் நன்றாக இருக்கிறார்கள். இதற்கு என்ன சொல்வது?

  ReplyDelete